நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க தற்போது போதுமான நிதி இல்லை என தெரிவித்துள்ளது.
மேலும் ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைவாக இருப்பதால் தற்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க முடியாது எனவும் மத்திய அரசு அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் தர வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.