Categories
அரசியல் மாநில செய்திகள்

விலை உயர்வுக்கு ”ஜிஎஸ்டி காரணமில்லை” … தமிழகம் முழுவதும் போராட்டம்… அர்ஜுன் சம்பத் அறிவிப்பு …!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த நேரத்திலே விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இப்படி பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசாங்கத்து மேல பழி போட்டுட்டு, ஜிஎஸ்டியால் தான் விலைவாசி உயர்த்தினோம்.

இதெல்லாம் பொய்யான தகவல். இவங்களுக்கு ஆளத் தெரியல. இவர்களுக்கு மக்களுக்கு நன்மைய செய்ய தெரியல. இவங்களுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியல. வீணா மத்திய அரசாங்கத்துக்கு மேல பழி போட்டுட்டு இவங்களுடைய லஞ்ச ஊழல், சட்ட ஒழுங்கு சீர்குலைவு. முறையற்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்ப 13, 14 மாசம் ஆச்சு. இனிமேலாவது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இது விஷயத்தில கவனம் கொடுக்க வேண்டும். இது வந்து நாங்க அவருக்கு கவன ஈர்ப்பாதான் இந்த விஷயத்தை சொல்றோம். இதுகுறித்து இந்த விலைவாசி உயர்வு, இந்த மின் கட்டண உயர்வு, இது பத்தியெல்லாம் இந்து மக்கள் கட்சி சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |