மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூலிக்கும் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன்எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்திக்கு முன் தேதி தேதியிட்டு ஜிஎஸ்டி வசூலிக்க திட்டமிடும் மத்திய அரசின் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன் எண்ணை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
இதுவரை மீன் தூள் மற்றும் மீன் உற்பத்திக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதுவும் முன்தேதியிட்டு 1.7.2017 முதல் இன்றைய தேதி வரை கட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் ரைடு செய்து கணக்குகள் அனைத்தையும் கொண்டு சென்று கம்பெனியின் அக்கவுண்ட்களையும் மூடக்கி உள்ளார்கள்.
இதனால் மேற்கொண்டு தொழில்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கம்பெனிகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டது. கம்பெனிகள் மூடப்படுவதால் மீனவர்கள் மட்டுமல்லாமல் அவர்களை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜிஎஸ்டியும் தவறு, முன்தேதியிட்டு எங்களிடம் வசூல் செய்ய முயற்சிப்பதும் தவறு என்று தெரிவித்துள்ளார்.