கொய்யாப்பழம் என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவகையான நன்மைகள் ஏற்படுகின்றன.
கொய்யாப்பழத்தில் மட்டுமின்றி கொய்யா இலையிலும் அதிகப்படியான நன்மைகள் நிறைந்துள்ளன.
கொய்யா இலையின் சில நன்மைகள்
- கொய்யா இலையில் தேனீர் போட்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
- தினமும் இரண்டு வேளை கொய்யா இலையில் போட்ட தேநீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து உடலைப் பாதுகாக்கும்.
- ஒரு கைப்பிடி அளவு அரிசி மாவுடன் 30 கிராம் அளவில் கொய்யா இலைகளை சேர்த்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஒரு நாள் 2 வேளை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
- கொய்யா இலைகளுடன் கொய்யா மரத்தின் வேரையும் சேர்த்து 15 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அந்த நீரை வடிகட்டிக் குடித்தால் செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கொய்யா இலைகளை 5 கப் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து நன்றாக வற்றும் வரை காத்திருந்து பின்னர் தண்ணீர் ஆறியவுடன் வடிகட்டி குடித்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடுவார்கள்.
- கொய்யா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து நமது முகத்தில் போட்டு வந்தால் முகப்பருவிற்கு முக்கிய காரணமாக இருக்கும் கிருமிகளை அகற்றும்.
- முடி நன்றாக வளர ஒரு லிட்டர் அளவு தண்ணீரில் 30 கொய்யா இலைகளை போட்டு தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின்னர் தலையை அலசி வந்தால் முடி நீளமாக வளரும்.