விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை (25-05-2020) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சூழலில் விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்.,
- விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் TNepass வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
- விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள்
- தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- தவறான தகவல் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனை ஏதும் இல்லை என்பது குறித்தும் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
- தங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரவில்லை என்பதற்கான உறுதியை விமானப்பயணிகள் தர வேண்டும்
- தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இல்லை என்பதற்கும் பயணிகள் உத்தரவாதம் தருவது கட்டாயமாகும் என கூறப்பட்டுள்ளது.