Categories
உலக செய்திகள்

“கண்டதும் காதல்!”.. உலக கின்னஸ் சாதனை படைத்த அழகான ஜோடி..!!

லண்டனில் கிட்டத்தட்ட 2 அடி உயர வித்தியாசம் கொண்ட காதல் ஜோடி உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளனர்.

லண்டனில் வசிக்கும் 33 வயதுடைய ஜேம்ஸ் என்ற நபர் தொலைக்காட்சி நடிகராகவும், தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் சோலி என்ற ஆசிரியையை கடந்த 2013ம் வருடத்தில் திருமணம் செய்துள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடந்த 2 ஆம் தேதியன்று, உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துவிட்டனர்.

எப்படி? என்றால், சோலி 166.1 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர். ஆனால் ஜேம்ஸ் 109.3 சென்டிமீட்டர் உயரம் உடையவர். ஏறக்குறைய இரண்டு அடி உயர வித்தியாசம் இருவருக்கும் இருக்கிறது. இந்த வித்தியாச தம்பதிக்கு, பெண்ணின் உயரம் அதிகமாகவும் ஆணின் உயரம் குறைவாகவும் இருக்கும் பிரிவில் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஜேம்ஸிற்கு, Diastrophic Dysplasia என்ற என்ற மரபணு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி அடையவில்லை. கடந்த 2012ம் வருடத்தில் சோலியின் நண்பர்கள் சிலர் ஜேம்ஸை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்கள். அவரைப் பார்த்தவுடன் சோலிக்கு பிடித்துள்ளது.

சோலிக்கு உயரம் அதிகமுள்ள ஆண்களைத்தான் பிடிக்குமாம். எனினும் ஜேம்ஸை பார்த்தவுடன் முதல் பார்வையில் காதலில் விழுந்து விட்டார். பல்வேறு சிரமங்களை சந்தித்த இவர்கள், ஒரு வழியாக கடந்த 2013 ஆம் வருடத்தில் திருமணம் செய்துவிட்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒலிவியா என்ற மகள் இருக்கிறார்.

Categories

Tech |