Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. உட்காந்துகிட்டே இவர் செய்த சாதனையை பாருங்க.. வைரலாகும் வீடியோ…!!

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரே நிமிடத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார்.

வங்காள தேசத்தின் தாக்குர்காவன் பகுதியில் வசிக்கும் ரசெல் இஸ்லாம் என்ற இளைஞர் தன் சிறு வயது முதலே ஸ்கிப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதிலிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். எனவே ஸ்கிப்பிங்கில் பல சாதனைகள் படைத்தவ அவர் தற்போது தரையில் அமர்ந்து கொண்டு வெகு வேகமாக ஒரு நிமிடத்திற்குள் நூற்றுக்கும் அதிகமான தடவை ஸ்கிப்பிங் செய்து அசத்தியிருக்கிறார்.

https://www.instagram.com/reel/CjOYHMjjGL1/?utm_source=ig_embed&ig_rid=f6dd4057-3cc8-4034-8112-c3e08c1d913f

அவர்  சுமார் 117 தடவை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று விட்டார். அவர், தரையில் இருந்து கொண்டு ஸ்கிப்பிங் செய்த வீடியோ வெளியாகி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |