Categories
உலக செய்திகள்

‘உடனே நிறுத்த போறியா இல்லையா’…. கிட்டார் வாசித்த மகன்…. தந்தையின் விபரீதமான முடிவு….!!

கிட்டார் வாசிப்பதை மகன் நிறுத்தாததால் ஆத்திரமடைந்த தந்தை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் Blue Ash  என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மோஹ்லர் சாலையில் இருக்கும் 3500வது பிளாக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் துப்பாக்கிச்சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கிட்டார் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குறிப்பாக துப்பாக்கி சூடு நடத்திய 79 வயதான ஹென்ஸ்லி சீனியர் என்பவரே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலில் ” எனது மகனான ஹென்ஸ்லி ஜூனியர் தொடர்ந்து கிட்டார் வாசித்து கொண்டிருந்தான். நான் அதை நிறுத்த சொல்லி அவனிடம் கூறினேன். ஆனால் ஹென்ஸ்லி ஜீனியர் நிறுத்தவில்லை. மேலும் அவனை மிரட்டுவதற்காக துப்பாக்கியை எடுத்தேன். அதனை கண்டவுடன் ஜீனியர்  பயந்து என்னை தாக்கினேன்.

அந்த சமயத்தில் என்னிடம் இருந்த துப்பாக்கியால் அவனை கைத்தவறி சுட்டுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து Blue Ash போலீசார் கூறியதில் ‘ ஹென்ஸ்லி சீனியர் மற்றும் அவரது மகனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹென்ஸ்லி சீனியரின் முகம் மற்றும் உதடுகளில் காயங்கள் இருந்தன. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஹென்ஸ்லி ஜூனியரிடம்  மருத்துவமனையில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது அவரிடம் ஹென்ஸ்லி சீனியர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவரோ எனக்கு அது குறித்து நினைவில்லை என்று கூறினார். இதனை அடுத்து ஹென்ஸ்லி சீனியர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹென்ஸ்லி சீனியரின் ஜாமீன் தொகை 60,000 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |