பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை.
குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளுக்கு வரும் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக சார்பில் 576 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அகமதாபாத் மாநகராட்சியில் உள்ள வார்டில் போட்டியிட பிரதமர் மோடியின் அண்ணன் மகள் சோனால் மோடி அவருக்கு சீட் வழங்கவில்லை.
குஜராத் நியாயவிலை கடைகள் சங்கத் தலைவராக உள்ள சோனால் மோடி தனக்கு சீட் வழங்கப்படவில்லை என்றாலும், பாரதிய ஜனதாவில் துடிப்புடன் செயல்பட உள்ளேன் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் பாஜக தலைவர்களின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்க கூடாது என்று கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.