Categories
தேசிய செய்திகள்

குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் எப்போது….? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியுடனும், 68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ஆம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனால் நடப்பாண்டின் இறுதியில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3:00 மணி அளவில் கமிஷன் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இதில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தின் தேர்தல் அதிகாரிகள் சமீபத்தில் சென்று இருந்தனர். மேலும் தற்போது இருந்தே குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி விட்டனர்.

Categories

Tech |