சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனுமதி பெற்று வைத்திருந்த 64 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், மல்லி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, வளையம்பட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 74 துப்பாக்கிகள் அனுமதி பெற்று பயன்பாட்டில் இருந்த நிலையில், இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 64 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.