Categories
உலக செய்திகள்

மொண்டெனேகுரோ நாட்டில் பயங்கரம்… வீதியில் செல்லும் மக்களை சுட்டுக்கொன்ற இளைஞர்..!!!

மொண்டெனேகுரோ நாட்டில் குடும்ப பிரச்சனையால் இளைஞர் துப்பாக்கிச் சூடு தாக்குதல்  நடத்தியதில் 11 நபர்கள் பலியாகியுள்ளனர்.

மொண்டெனேகுரோ நாட்டில் இருக்கும் மெடொவினா நகரில் வசிக்கும் 34 வயது இளைஞர், குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளால், தன் துப்பாக்கியை எடுத்துச் சென்று, குடும்பத்தினர் மற்றும் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் என்று பலரை சுட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றார்கள். எனினும், அந்த நபர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 11 நபர்கள் பலியானதாகவும், காவல்துறையினர் உட்பட ஆறு நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |