அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு மக்கள் பலரும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரும் பலியாகியுள்ளார். இதனையடுத்து இப்பகுதிக்கு அருகில் உள்ள ஒரு நடுநிலை பள்ளி பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபர் திடீரென்று தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. எனவே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.