கனடாவில் தன் மகனுடன் வாகனத்தில் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Coquitlam என்னும் நகரத்தில் ஒரு நபர், தனது 9 வயது மகனுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் அவர் காயமடைந்தார். எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்த பின் வீடு திரும்பியதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் அந்த வாகனத்தில் அவரின் மகனும் இருந்திருக்கிறார். ஆனால் அச்சிறுவன், பின்புற இருக்கையில் அமர்ந்திருந்ததால் நல்ல வேளையாக காயங்களின்றி தப்பினார்.
இது தொடர்பில் காவல்துறையினர் கூறுகையில், அப்பகுதியில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இச்சம்பவம் அதனுடன் தொடர்புடையதா? என்று தற்போது தெரியவில்லை. எனவே சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள் இது தொடர்பில் தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.