கனடா நாட்டில் வசிக்கும் இங்கிலாந்தை சேர்ந்த நபர்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
கனடா நாட்டின் லேங்கலி என்ற நகரில் இருக்கும் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் வாழும் பகுதிக்கு ஒரு மர்ம நபர் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அவர், திடீரென்று அங்கிருக்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலத்த காயங்களுடன் பல மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துப்பாக்கி சுடு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர தாக்குதலி ல் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை வெளியாகவில்லை. அமெரிக்க நாட்டை விட அதிகமாக துப்பாக்கி சூடு தாக்குதல் கனடாவில் நடக்கிறது.