இங்கிலாந்தில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் மாகாணத்தில் கீஹாம் என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். எனவே அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளனர். எனினும் இத்தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காவல்துறையினர், உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் அந்த நபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 10 வயது சிறுவனும் இத்தாக்குதலில் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.