Categories
உலக செய்திகள்

கேளிக்கை விடுதியில் துப்பாக்கிசூடு தாக்குதல்…. இளம்பெண் பரிதாப பலி…!!!

இங்கிலாந்தில் இருக்கும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இருக்கும் வலாசே என்ற நகரில் இரவு நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய ஒரு கேளிக்கை விடுதி அமைந்திருக்கிறது. அதில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூட்டம் இருந்தது.

அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று தன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |