லண்டனின் கிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில், காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனின் கிழக்கு பகுதியில், நேற்று இரவு சமயத்தில் நியூஹாம் பகுதியில் இருக்கும் ஒரு சலூன் கடையில், மர்மநபர்கள் திடீரென்று புகுந்து, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் மூவருக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கு கத்திகுத்து காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதன்பின்பு, காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், அவர்கள் தொடர்பில் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இச்சம்பவம் தீவிரவாத தாக்குதல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர், தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், குற்றவாளிகள் குறித்த தகவல் அறிந்தவர்கள், உடனடியாக தங்களை அணுகுமாறு, பொது மக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.