அமெரிக்க நாட்டில் பூங்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு நபர்களுக்கு காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை தடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் வாகன கண்காட்சி நடந்திருக்கிறது.
எனவே, அதனைக்காண அதிகமான மக்கள் குவிந்திருந்தார்கள். அப்போது, திடீரென்று மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினர் தெரிவித்ததாவது, பூங்காவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
LAPD News/Update: Our Detectives are working on a crime scene at Peck Park in the 500 Block of Western Av. There are no public safety concerns at this time. The park will remain closed for hrs until the preliminary investigation is complete.
— LAPD HQ (@LAPDHQ) July 25, 2022
இதில், காயமடைந்த 7 பேரில், இரண்டு பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுண்ணறிவு பிரிவினர், அந்த பூங்காவில் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள். பொது பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆரம்ப கட்ட விசாரணை முடியும் வரை பூங்கா சில மணி நேரங்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.