அமெரிக்க நாட்டில் விமான நிலையத்தில் துப்பாக்கியை ஒரு நபர் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமான நிலையத்திற்குள் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்திலிருந்து ஒரு நபர் விமானத்திற்குள் நுழைந்தார்.
அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கோழி இறைச்சி இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனுள் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த துப்பாக்கியில் குண்டுகள் இருந்ததா? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.