அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு வெளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி என்ற நகரத்தில் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு வெளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த நபர் திடீரென்று தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் அந்த மர்ம நபர் தாக்குதல் நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.