போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏகே. விசுவநாதன் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி, தவறான தகவல்களை கூறி பொதுமக்களை குழப்புவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் ஆறாம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்த போது, பல்வேறு தகவல் தெரிவித்து வந்தது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி நோயாளிகளை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தார் போன்ற பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. அதேபோல அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வேறு விதமான நோய்களுக்கு மருந்து அளிப்பதாகக் கூறி இரண்டு நோயாளிகளை அவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளை பதிவு செய்தார்கள் தற்போது அவருக்கு தற்போது கடும் நடவடிக்கை எடுத்து எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.