பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துறை அதிகாரிகளுடன் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆலோசனை நடத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58 ஆவது குருபூஜை விழா வரும் 30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளன. குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பசும்பொன்னுக்கு செல்லும் வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புகள் சோதனைச் சாவடிகளில் எப்படி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு அவசர காலத்தில் அருகில் உள்ள மருத்துவமனைகள் சிசிடிவி கேமரா அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.