ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் ஆண்களின் பெரிய பிரச்சினையாக இருப்பது விந்தணு குறைபாடு. இந்நிலையில் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான ஆண்களிடம் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் 1973 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2011 ஆம் ஆண்டில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 51.3 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் மேலும் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நவீன வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் ஆகும்.