ஆண்கள் மலட்டுத் தன்மையை உண்டாகும் காரணங்களில் முக்கியமானவை எவை என்பதை இதில் பார்ப்போம்.
குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும், தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிக அளவில் கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுத்தன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே காரணம் ஆகும்.
ஆண்களின் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கைமுறையை காரணமாக தெரிகிறது. 30 சதவீத ஆண்கள் மலட்டு தன்மை கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. மலட்டுத்தன்மை என்பது வேறு ஆண்மை குறைபாடு என்பது வேறு. மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் அதிக அளவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள முறைபாட்டுக்கு உட்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட் குறிப்பாக பீட்சா, பர்கர், ப்ராசஸ் இனிப்பு உணவுகள், குளிர்பானங்கள் உள்ளிட்ட ஜங்க் ஃபுட் உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை 25% வரை குறைந்து வருவது ஆய்வில் உறுதியானது.
இதற்கு தீர்வு என்னவென்றால் உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஒரு நாட்களுக்கு சிறிதளவாவது நாம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக மடிக்கணினியை மடியில் வைத்து ஆண்கள் பயன்படுத்தினால் அதிக அளவு வெப்பநிலை விந்துக்களை சூடாக்குகிறது. இதனால் விந்துக்களின் உற்பத்தியில் தரத்தை குறைக்கின்றது. இதற்குத் தீர்வு பிரஷ்ஷான காய்கறிகள், கனிகள், மீன், இறைச்சி உள்ளிட்டவை அடங்கிய ஆரோக்கியம் உணவு முறையால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும்.