Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு… படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்…!!!

நடிகர் ஜிவி பிரகாஷ் இயக்குனர் எம் . ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும்  படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அசத்தி வருபவர் ஜிவி பிரகாஷ் . இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த எம்.ராஜேஷ் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் நேரடியாக டிவியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

மேலும் ரேஷ்மா ,டேனியல் ,ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . அதில் ‘வணக்கம்டா மாப்ள’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

Categories

Tech |