‘செல்ஃபி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”செல்பி”. இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 1ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், ‘செல்ஃபி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று பிரபல aha தமிழ் OTT தளத்தில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
A project that led me to my most stimulating #ahaMoment. The movie that uncovered the biggest scams in education.
Very proud to announce #SelfieOnAHA. Premieres 14th April on @ahatamil#EducationScamUncovered #Selfie #ahaTamil #ahaDigitalPremiere pic.twitter.com/IyqC6ARQ5u
— G.V.Prakash Kumar (@gvprakash) April 12, 2022