Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜி.வி பிரகாஷின் அடுத்த படம்” இன்று வெளியாகிறது புதிய அப்டேட்…!!

ஜி.வி பிரகாஷின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிவி பிரகாஷ் , சித்தார்த் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜீவியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. சதீஷ் குமார் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது.தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெஸ்ட் டிபியூட் ஆக்டர் என்ற விருதினையும் பெற்றார்.

அடுத்தடுத்து திரிஷா இல்லனா நயன்தாரா , பென்சில் , கடவுள் இருக்கான் குமாரு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எந்த கதையை தேர்ந்தெடுத்தாலும் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வருபவர் ஜீவி என்ற பெயரை பெற்றார். இப்படி குறுகிய காலத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜீவியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Categories

Tech |