‘பேச்சுலர்’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பேச்சுலர்”. திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார்.
இதனையடுத்து, டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை பிரபல OTT நிறுவனமான சோனி லைவ் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are listening to your requests! #Bachelor will be streaming on @SonyLIV real soon ☺️#BlockbusterBachelor@gvprakash @Dili_AFF @AxessFilm @Sathishdiroff @SakthiFilmFctry @thenieswar @Sanlokesh @divyabarti2801 @itspooranesh @APIfilms @thinkmusicindia @DoneChannel1 @Duraikv pic.twitter.com/p8ZApaHARh
— Axess film factory (@AxessFilm) December 27, 2021