Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப நாள் சிக்கல்… இப்ப தீத்தாச்சு…. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷின் திரில்லர் மூவி…!!!

நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த ஜிவி பிரகாஷின் திரைப்படம் ரிலீசாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் திரைப்படம் சில பொருளாதார காரணங்களால் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் மீதிருந்த சிக்கல்களையெல்லாம் நீக்கி ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். அதன்படி ஜீவி பிரகாஷின் ஐங்கரன் திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் ஜனவரி மாத தொடக்கத்தில் வலிமை திரைப்படமும், ஆர்.ஆர்.ஆர் படமும் வெளியாக இருப்பதால் ஐங்கரன் திரைப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.

Categories

Tech |