Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தப் படத்திற்கு மாஸ் கூட்டணியுடன் வரும் வெற்றிமாறன்!

பல வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி, நடிகர் சூர்யாவுடன் அடுத்தப் படத்திற்கு ஆயத்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தனது அசுரன் படத்தின் மூலமாக பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன். அதன் பின்பு வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றப்போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஜி.வி. க்கு 75ஆவது படமாக இருக்கப்போகிறது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |