ஜிம் உரிமையாளர் 17 வயது மாணவியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காகங்கரை பகுதியில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜிம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிரஞ்சீவி தனது சகோதரியின் தோழியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்யும் நோக்கத்தில் அந்த மாணவியை சிரஞ்சீவி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜிம் உரிமையாளரான சிரஞ்சீவியை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.