Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 10 முதல்….. தமிழகம் முழுவதும் இயங்க அனுமதி….. அரசு உத்தரவு….!!

தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி மையங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

இதில் பல விஷயங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், ஜிம், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி முதல் மீண்டும் தனியார் உடற்பயிற்சி மையங்கள் (ஜிம்) இயங்க முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

அதன்படி, 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உரிய செயல் முறைகளை கடைபிடிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.அரசு அளிக்கும் விதிமுறைகளை கைபிடிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |