Categories
அரசியல்

” H.ராஜா ஒரு முந்திரி கொட்டை ” EVKS இளங்கோவன் கிண்டல்….!!

H.ராஜா ஒரு முந்திரி கொட்டை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்று ஐந்து முனை போட்டி ஏற்பட்டதையடுத்து கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

இதில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் , அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவும் தங்களின் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கின்றனர்.இந்நிலையில் முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தமிழக முன்னாள்  காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Image result for EVKS இளங்கோவன் h raja

அப்போது அவர் கூறுகையில் , நான் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று எண்ணினேன் . ஆனால் ஈரோடு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.  காங்கிரஸ் கட்சியின் தலைமை என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கே போட்டியிடுவேன்.  பிஜேபி கட்சியின் தலைமை வெளியிடுவதற்கு முன்னதாக H.ராஜா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தொடர்பாக பேசிய EVKS இளங்கோவன் , H.ராஜா ஒரு முந்திரி கொட்டை அவர் கட்சியின் தலைமை வெளியிடுவதற்கு முன்னதாக வேட்பாளரை அறிவித்துள்ளார் என்று கிண்டல் செய்துள்ளார்.

Categories

Tech |