சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் மூத்த தலைவர்கள் இருக்க வேண்டுமென்று தான் தேசிய பொறுப்பு வழங்கவில்லை என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு தமிழகத்தில் தலைவர் யாரும் இல்லாததால் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப் படவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கூறிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் களப் பணியாற்ற பொறுப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய செயலாளராக எச்.ராஜா தேர்வு செய்யப்படாதது, மூத்த தலைவர்கள் எல்லாமே அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்கள் வந்தால் வந்தால்தான் தேர்தல் களம் சூடு பிடிக்கும். தேசிய அளவில் பாஜக தமிழ்நாடு மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளது.