Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்…!!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

எதிர்க் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் குடியரசுத் தலைவருக்கு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூடாது. ஏனென்றால் அது முறையான விதிமுறைகளை பின்பற்றி, மரபுகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக மாநிலங்களவையில் விதிமுறைகளுக்கு மாறாக துணைத்தலைவர் நடந்துகொண்டார். எனவே இதற்கு ஒப்புதல் வழங்க கூடாது, திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார்கள். அதனால் அந்த கோரிக்கை என்பது நிராகரிக்கப்பட்டு இருக்கின்றது. குடியரசுத் தலைவர் இந்த 3 மசோதாக்களுக்கு தற்போது சட்ட ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.

இதையடுத்து இந்த சட்ட மசோதாக்கள் தற்போது கெஜட் நோட்டிபிகேஷன் ஆக வெளியிடப்பட்டு இருக்கிறது. அதாவது அது சட்டமாக மாறிவிட்டது. இனி அது ஒரு புதிய சட்டம் ஆகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இனி நீதிமன்றத்தை நாடியே மாற்ற முடியும்.  ஏற்கனவே கேரளா அரசு அதற்கான முடிவை எடுத்திருக்கிறார்கள்.

நிறைய கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர்.வேளாண் சட்ட மசோதாக்களை அரசியல் ரீதியிலான விஷயங்கள் எல்லாம் நிறைவடைந்து விட்டது. இனி நீதிமன்ற வாயிலாக இந்த சட்டத்திற்கு தடை விதிப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களு நடைபெறும்.

Categories

Tech |