Categories
அரசியல் மாநில செய்திகள்

தடையை மீறி மெரினாவில் தர்ணா: ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு.!

நெல்லை கண்ணனை கைதுசெய்யக்கோரி மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேச்சாளர் நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவர் குறித்து பொதுமேடையில் அவதூறாகப் பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக தலைவர்கள் ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன் உள்பட பலர் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை கண்ணனை பெரம்பலூரிலுள்ள தனியார் விடுதியில் காவல் துறையினர் நேற்று கைதுசெய்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்திய ஹெச். ராஜா,பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது மெரினா கடற்கரை காவல் துறையினர், பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்தல்,சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |