H.ராஜா தனது ட்வீட்_டர் பக்கத்தில் பெரியாரின் மூட நம்பிக்கை குறித்து பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்ட பெரியார் குறித்த பதிவு சர்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா சமீபத்தில் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , எது மூட நம்பிக்கை ஈ.வெ.ரா ஜாதியை ஒழித்தார் என்பதும், திமுக ஆட்சி அமைக்கும் என்பதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மதசார்பற்ற கட்சி என்பதுமே மூட நம்பிக்கை என்று பதிவிட்டுள்ளார்.
எது மூட நம்பிக்கை!
ஈ.வெ.ரா ஜாதியை ஒழித்தார் என்பதும்!
திமுக ஆட்சி அமைக்கும் என்பதும்!
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மதசார்பற்ற கட்சி என்பதுமே
மூட நம்பிக்கை.@dinamalarweb @ThanthiTV@DINAMANI @PTTVEnglish
@dinakaranonline @polimernews @news7tamil @thatsTamil— H Raja (@HRajaBJP) January 3, 2020