டெல்யில் நடைபெறும் சம்பவம் போல தமிழகத்திலும் நடக்கலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை போல தமிழகத்தில் நடைபெறலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில் , தமிழகத்திலும் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் , செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறினார்கள். ஆயுதங்ள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வேண்டுமென்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும்
— H Raja (@HRajaBJP) February 25, 2020