அமெரிக்கா ஹெச்1பி விசாவுக்கு மின்னணு முறையில் முன்பதிவு செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற வகைசெய்யும் H1B விசாவுக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். ஆண்டுதோறும் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், விண்ணப்பம் பெற தொடங்கி சில நாட்களிலேயே 85 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விடுகின்றனர். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்படுவதில்லை.
இதற்கு மாற்றாக முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு அமெரிக்கா குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021ல் விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2020 ஏப்ரலில் அதற்கான முன்பதிவை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதில் விண்ணப்பிப்பவர்களின் முழு விவரங்களும் அளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டினால் ஏற்கக்கூடிய விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு முறைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் சரியாக குறிப்பிடப்படவில்லை.