நெருங்கி வரும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு வழக்கத்தைவிட 8 மடங்கு கூடுதலாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துபாய் நாட்டின் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துபாய் நாட்டில் ஏற்கனவே எக்ஸ்போ 2020 என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெருங்கி வரும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு துபாயில் வழக்கத்தை விட 8 மடங்கு கூடுதலாக வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இசையுடன் கூடிய வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நள்ளிரவு 2 மணி வரை நடைபெறவுள்ளதாக குளோபல் வில்லேஜ் கண்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏற்பாடுகள் 26 நாட்டிலுள்ள அரங்குகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வானவேடிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொது மக்கள் கொரோனா தொடர்பான விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.