Categories
தேசிய செய்திகள்

“ஆரோக்கிய சேது” 9,00,00,000 மக்களின் DATA…… நாளை பதிலளிக்கிறேன்….. மத்திய அரசுக்கு ஹேக்கர் பதில்…!!

ஆரோக்கியா சேது செயலியை ஹேக் செய்வது குறித்து நாளை உங்களை தொடர்பு கொள்கிறேன் என பிரான்ஸ் ஹேக்கர் ஒருவர் மத்திய அரசின் ஆரோக்கிய சேது  செயலியின்  ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு சார்பில் இயக்கப்படும் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு நிறுவனங்களை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் ஆரோக்கியா சேது செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த செயலியானது பாதுகாப்பற்ற செயலி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது என்று விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஹேக்கரும், சைபர் கிரைம் துறையின் வல்லுனருமான எலியட் ஆல்டர் ஆரோக்கிய சேது செயலில் பாதுகாப்பு குறை இருப்பதாகவும், 9 கோடி இந்தியர்களின் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

  இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது தான். இதில் மீண்டும் நாங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அந்த செயலியின்  அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டதுடன், பிரான்ஸ் ஹேக்கரின்  கருத்துக்கும் நன்றி தெரிவித்ததோடு, இதன் குறைகளை கண்டறிய மற்ற நாட்டவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த எலியட் ஆல்டர்சன் நாளை மீண்டும் இதுகுறித்து சொல்கிறேன் என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |