Categories
உலக செய்திகள்

ஹேக்கர்கள் அட்டகாசம்…! ”இங்க போய் கைவச்சுட்டீங்களே” ஷாக் ஆன உலக நாடுகள் …!!

உலக அளவில் முக்கிய அமைப்புகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றது சைட் இன்டலிஜென்ஸ் மூலம் தெரியவந்துள்ளது

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் சூழலில் சில ஹேக்கர் கும்பல் உலக சுகாதார அமைப்பு, வூஹான் தொற்று நோய்  நிறுவனம், கேட்ஸ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் டிஜிட்டல் தகவல்களை ஹேக் செய்திருப்பது சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இணையதளத்தில் ஹேக்கர்கள் மற்றும் பயங்கரவாதிகளின்  செயல்களை கண்காணிக்கும் அமெரிக்க நிறுவனமான சைட் இன்டலிஜென்ஸ் நடத்திய ஆய்வில்  பல முக்கிய அமைப்புகளின் செயல்பாட்டுக்குள் சென்று திருடப்பட்ட 25 ஆயிரத்திற்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள், பாஸ்வேர்டுகளை சமூக வலைதளங்களில் பரப்பவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து உலக வங்கி, ஒவ்வாமை மற்றும் நோய் தடுப்பு மையம், உலக சுகாதார அமைப்பு என பல இடங்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்ததோடு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அதிக அளவு பாதிப்பை சந்தித்து உள்ளதாக சைட் இன்டலிஜென்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து மட்டுமே 9938 மின்னஞ்சல்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் திருடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.  இது தொடர்பாக சைட் இன்டலிஜன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பேசுகையில் “நவீன நாஜிக்களும், வெள்ளை இனவாதிகளும் தனது இந்த தகவல்களை பலருக்கும் விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் பெற்று இருப்பதாக தெரிகிறது” என கூறியுள்ளார்.

Categories

Tech |