Categories
அரசியல்

பிஜேபியை “பீப் ஜனதா பார்ட்டி” என்று மாற்றிய ஹேக்கர்கள்…..!!

மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற நிலையில் ஹேக்கர்கள் பாஜகவின் டெல்லி இணையத்தை ஹேக் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.இதற்கிடையே பாஜகவின்  டெல்லி இணையதளம் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் அந்த இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி ,  மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளின் புகைப்படம்  பதிவு செய்யப்பட்டிருந்தது.

பா.ஜனதா இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி விருந்து புகைப்படங்கள் பதிவு

இதை ஹேக் செய்த ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்று இருந்ததை  Beef Janata Party என மாற்றியுள்ளனர். மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து மெனுவையும் மாற்றியுள்ளனர். இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியதை கண்டு அதிர்ச்சியடைந்த பாஜகவினர்  இணையதளத்தை சரிசெய்யும் பணியை மேற்கொண்டு சரி செய்து வருகின்றனர். மேலும் இதை யார் செய்தார்கள் என்ற விசாரணையும் நடைபெற்ற வருகின்றது.

Categories

Tech |