வயிற்று வலி என சென்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த சுவீட்டி குமாரி என்ற பெண் நெடுநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து புற்று நோய் இருக்கலாம் என கருதி உள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளைக் கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்கள் சுவீட்டி குமாரிக்கு தனது முடியை கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் அவர் கடித்து விழுங்கிய முடிகள் பல வருடங்கள் சேர்ந்து 7 கிலோ எடை கொண்ட ஒரு பந்தாக மாறியுள்ளது. 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த பிறகு மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த அந்த முடி பந்தை அகற்றினர்கள் . இதுகுறித்து மருத்துவரான சகோ கூறுகையில் 40 வருடங்கள் மருத்துவராக இருந்த அனுபவத்தில் இப்படி ஒரு விஷயத்தை இதுவரை பார்த்ததில்லை என கூறியுள்ளார்.