முடியை ஆரோக்கியமான முறையில் மெயின்டெயின் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தங்களுடைய கூந்தல் ஸ்மூத்தாக கருமையாக வளர வேண்டும் என்ற எண்ணம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலருக்கும் உண்டு. அப்படி தங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயம் பயன்படுத்துங்கள். பொதுவாக முடி உதிர்தல் என்பது அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும். இதற்கு மாறாக வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
வெறும் வாணலியை மிதமான சூட்டில் முதலில் அடுப்பில் எடுத்துவைக்கவும். அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு பின் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வதக்கி பின் அந்த எண்ணெயை எடுத்து முடியில் அப்ளை செய்யவேண்டும். பின் துண்டு ஒன்றை எடுத்து வெந்நீரில் நனைத்து தலையில் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் தேங்காய் எண்ணெய் முடியின் வேர் வரை ஊடுருவி நல்ல ஆரோக்கியமான பலனைத்தரும் முடியும் நன்கு வளரும்.