Categories
உலக செய்திகள்

ஸ்ப்ரேயை பயன்படுத்திய பெண்… தலையோடு ஒட்டிக்கொண்ட முடி… மன்னிப்பு கேட்ட நிறுவனம்… USAவில் விவாதமான சம்பவம் …!!

கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை உபயோகித்தத பெண் ஒருவருக்கு தலையில் முடி ஒட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள லூசியானா பகுதியில் டெசிகா பிரவுன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வழக்கமாக தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தப்படும் ஹேர் ஸ்ப்ரேக்கு பதிலாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை உபயோகித்ததாக தெரிவித்துள்ளார். இந்த கொரில்லா க்ளூ ஸ்ப்ரே பயன்படுத்திய பிறகு அவருடைய முடியானது தலையில் இருக்கமாக ஒட்டிக் கொண்டுள்ளது.

இதனையடுத்து பிப்ரவரி 6 ஆம் தேதி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து அறிந்த கொரில்லா க்ளூ நிறுவனம் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பல பிரபலங்களின் கவனத்தை ஈர்த்ததால் அவர்கள் அனைவரும் டெசிகா பிரவுனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |