ஹைட்டி என்ற கரீபியன் நாடு ஒன்றின் அதிபரை கொன்ற கூலிப்படையினர் நான்கு பேரை அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
கரீபியன் நாடான ஹைட்டியின் அதிபரான ஜொவினஸ் மோஸை கடந்த புதன்கிழமை அன்று சிலர் கொலை செய்தனர். நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலிருக்கும் மலைகளில் அவரின் வீடு இருக்கிறது. அங்கு நள்ளிரவில், கமாண்டோக்கள் குழுவினர் அவரை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பலத்த காயமடைந்த Martine Marie Etienne Joseph என்ற ஹைட்டியின் முதல் பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிகாரிகள், போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டபோது கூலிப்படையினர் 4 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை கைது செய்து காவலில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.