ஸ்டாலினுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ஸ்டாலின் தான் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலஜாவில் முப்படை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் செய்தியாளர்களை சந்தித்து , காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.