Categories
கொரோனா தடுப்பு மருந்து

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இவர்களுக்கு கொடுக்கக்கூடாது-மத்திய அரசின் அறிவிப்பு…!


கொரோனா உடையவர்களில் இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். முழு பரிசோதனை முடிந்து தடுப்பூசிகள் கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம். இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை செய்தியாளர்களிடம் போட்டியிலே பரிந்துரைத்தார். இந்த மருந்து இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவர்கள் கூறுகையில் நோயின் தாக்கம் குறைவாகவோ  அல்லது நடுத்தரமாகவோ  இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த வேண்டும் எனவும், தீவிர பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட  குறைவான மற்றும் நடுத்தரமான பாதிப்பு இருக்கும் நோயாளிகளில் 60 வயதிற்கு குறைவானவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நீடித்த நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் நோய், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் உடல் பருமன் பிரச்சினை உடையவர்களுக்கு தீவிர மருத்துவர் மேற்பார்வையில் இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். நடுத்தர பாதிப்பு நோயாளிகளுக்கும் இசிஜி பரிசோதனைக்கு பின்பு தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்க வேண்டும், ஏனெனில் இந்த மாத்திரைகள் அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |